Monday, December 1, 2025

அதிரையர்களே எச்சரிக்கை ! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் காணாமல் போகும் !!

spot_imgspot_imgspot_imgspot_img

சமீப காலமாக வங்கி அதிகாரி என கூறி வரும் தொலைப்பேசி அழைப்புகளை அடுத்து அப்பாவி மக்கள் தமது வங்கி விபரங்களை எதிர்முனை நபர்களிம் தெரிவிக்கின்றனர்.

தெரிவித்த மறு வினாடியே வங்கியில் உள்ள நமது பணம் அபேஸ் ஆகிவிடுகிறது !

அந்த வகையில் தான் அதிராம்பட்டினம் தனியார் பள்ளியின் ஆசிரியைக்கும் இன்று காலை போன்கால் வந்துள்ளன. எதிர் முனையில் பேசிய பெண் தாங்கள் ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுகிறேன் என்றும் உங்களுடைய ஆதார் கார்டு , வங்கி அட்டையை சரிபார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

உடன்பட்ட அந்த அப்பாவி ஆசிரியை முதலில் வங்கி அட்டை எண்ணை தெரிவித்துள்ளார். அடுத்ததாக உங்கள் மொபை எண்ணுக்கு வந்த OTP ரகசிய குறியீட்டு எண்ணை சொல்லுங்கள் என கேட்டுள்ளார். இதனையும் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியை !

சற்று நிமிடத்தில் காணாமல் போனது வங்கியில் இருந்த ₹35,000 !

பதறி அடித்துக்கொண்டு வங்கியை நாடிய ஆசிரியர் வங்கியில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என கைவிட்டது வங்கி !!

வங்கியில் எத்தனையோ எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இருந்தும் பறிகொடுக்கும் நிலை நீடிக்கத்தான் செய்கிறது என்றும் , வங்கியில் இருந்து இது போன்ற அழைப்புகளை யாருக்கும் செய்வது இல்லை எனக்கூறும் வங்கி அதிகாரி , தேவையற்ற கால்களை தவிர்த்தால் மட்டுமே இணைய வழிக்கொள்ளையை தடுக்க இயலும் என்கிறார் !

மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக யாரும் கூறினால் இணைப்பை துண்டித்து விட்டு தாம் சார்ந்த வங்கிக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் தங்களின் வங்கிக்கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img