Sunday, February 1, 2026

தொடர் மழை, வெள்ளம்… தமிழகத்தில் இரண்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

spot_imgspot_imgspot_imgspot_img

தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரியில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தீவுகள் போல மாறி வருகின்றன. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர் திவ்யா.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img