Friday, March 20, 2026

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டங்கள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் 7வது நிகழ்ச்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து நடத்தும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக்காக விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (25.09.2018) காலை 9.00 மணிக்கு பேருந்து நிலையம் எதிர்புறம் ஜக்கரியா காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். அதிராம்பட்டிம் சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் , பொருளாளர் எம்.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் அப்துல்லாஹ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் அதிராம்பட்டினத்திலுள்ள அரசு பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 20 விலையில்லா குப்பைத்தொட்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த பேரா.மேஜர் கணபதி, பேரா.கா.செய்யது அகமதுகபீர், அப்துல் ஜலீல், ஆறுமுகசாமி, சாகுல்ஹமீது, அபுல்ஹசன், சாதுலி, உமாசங்கர், செல்வராஜ் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் வ.விவேகானந்தம், பேரா.ஹாஜா அப்துல்காதர், என். சேக்தம்பி மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் லயன்ஸ் சங்க செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img