Saturday, September 13, 2025

எச்சரிக்கை பதிவு : கலாச்சார சீர்கேட்டில் சிக்கப்போகும் அதிரை ?

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த வாரம் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இத்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அழகாக காட்சி தருகிறது.

ஆனால் அதிரை ரயில் நிலையத்தை பார்வையிட இளம்பெண்களும், குமரிப்பெண்களும் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். ஆண்களின் துணையின்றி பெண்கள் கூட்டம் கூட்டமாக வருவது நிச்சயமாக சீரழிவையே உருவாக்கும்.

ஏதோ சுற்றுலா தலங்களுக்கு செல்வது போல் ரயில் நிலையத்திற்கு செல்லும் அதிரை இளம்பெண்கள், அங்கு புகைப்படம் போன்றவைகளை எடுக்கின்றனர். அவ்வாறு வரும் பெண்களை சமூக விரோதிகள் படம் பிடிக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் ?

ஒழுக்கத்திற்கு பெயர் போன நம் அதிராம்பட்டினத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படவேண்டியது. இதுகுறித்து ஆலிம்களும், ஜமாஅத்தினரும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் அதிரை ஆண்களும், உள்ளூரில் இருக்கும் ஆண்களும் இவ்விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் தங்கள் வீடுகளில் உள்ள பெண்கள் சுற்றிப்பார்க்க ரயில் நிலையம் செல்வதை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மிகப்பெரிய கலாச்சார சீர்கேட்டிலிருந்து நம் இளம்பெண்களை பாதுகாக்க முடியும் !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img