Saturday, March 21, 2026

7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு பகல் 12.07 மணியளவில் வந்தது.

அதிரைக்கு வந்த பயணிகள் ரயிலை, ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிரைவாசிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதற்காக பெரியவர்கள் முதல் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் அதிரை ரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். இந்த ரயிலானது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும்.

மேலும் இன்று தொடங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவையில், நாகை  நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட்  உறுப்பினர் எம். செல்வராசு திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வரை ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img