Monday, September 15, 2025

அதிரையில் மதநல்லிணக்கம் போற்றும் இல்ல மண விழா!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை ஆங்காங்கே கண்டிருப்போம்.

அதே போல நமது அதிரை நகரத்திலும் R.சோமசுந்தரம் அவர்களின் இல்லத் திருமணத்தின் போது அவர் வீட்டருகில் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.

தொழுகைக்காக பாங்கு சப்தம் கேட்டவுடன் அந்த பாடல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமண வீட்டாரிடம் நாம் கேட்டபோது;

இஸ்லாமியர்களும் நாங்களும் இப்போதல்ல அப்போதிலிருந்தே அண்ணன், தம்பிகளாக உற்ற நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களுக்கு ஒன்று என்றால் அவர்களும், அவர்களுக்கு ஒன்று என்றால் நாங்களும் ஓடோடி சென்று உதவக் கூடியவர்கள்.

அதனால் தான் அவர்களுடைய பள்ளிவாசல்களில் பாங்கு சப்தம் ஒலித்தபோது மரியாதைக்காக நாங்கள் எங்கள் திருமண வீட்டில் ஒலித்த பாடல்களை நிறுத்தினோம் என்றனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களை மதத்தைக் காட்டி பிரிக்க நினைத்தாலும் தமிழகத்தில் சிலரின் சூழ்ச்சி பலிக்காது என்பதற்கு இது போன்ற சம்பவங்களும் சான்றாக இருக்கிறது.

நாளைய தினம் திருமணம் எனும் பந்தத்தில் இணையும் மணமக்கள் S.சிலம்பரசன் – S.வினிதா ஆகியோர் என்றென்றும் சிறப்புடன் பல்லாண்டு வாழ எமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்திக் குழுமம் மனதார வாழ்த்துகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை திருமணங்களில் சோற்றுடன் பரிமாறப்படும் கொரோனா.?

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்...

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா...

அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமண விழா !!(படங்கள்)

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது. அஹ்லன் கலீஃபா - ஆலிமா ஆதிலா...
spot_imgspot_imgspot_imgspot_img