தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்.
சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
தாயும் மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளமை அதிசயிக்கத்தக்க ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும், இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அம்மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு “ரஜப்” என்றும் மகள் “தையிப்” என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் அதிரை, நாகூர்,...





