Tuesday, September 16, 2025

நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ரூ 1 உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் பெறப்படும் தொகை சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடி விழுந்தாற்போல் இந்த விலை உயர்வு உள்ளது.

பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இன்று சவரனுக்கு ரூ.512 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img