Monday, December 1, 2025

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #beef4life ஹேஷ்டேக் !

spot_imgspot_imgspot_imgspot_img

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பைசான், கடந்த 9ம் தேதி தான் மாட்டுக்கறி சூப் குடிக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முஹம்மது பைசான், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் எதை சாப்பிட வேண்டும் என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில் #beef4life மற்றும் #WeLoveBeef என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன. இந்த ஹேஷ்டேக் மூலம் மாட்டிறைச்சிக்கு தங்களின் ஆதரவு மற்றும் அது தொடர்பான கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img