Friday, December 19, 2025

அதிமுகவிடமிருந்து திமுகவிற்கு செல்கிறதா ராதாபுரம் தொகுதி ?

spot_imgspot_imgspot_imgspot_img

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், 151 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.

இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். வெறும், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து, அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில்தான், 203 தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 19, 20, 21 என கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதாக அப்பாவு தெரிவித்தார். எனவே, இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு எந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அலுவலரிடம், அப்பாவு வாக்குவாதம் செய்தார். சரியாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், 151 வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன், என்று தெரிவித்திருந்தார். எனவே ஒருவேளை தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், இந்த அளவுக்கான, வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img