Saturday, March 28, 2026

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் !

spot_imgspot_imgspot_imgspot_img

பல்வேறு நாடுகளில் அதிராம்பட்டினம் மக்கள் சிலர் தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் அமெரிக்கா, ஜப்பான், துபை, கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா என்ற கடுமையான நோய் தொற்று பரவியதை அடுத்து அந்நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதில் ஊரடங்கும் ஒன்றாகும். இதனால் அங்கு பணிக்கு சென்றிருந்த அதிரையர்கள் பலர் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இவர்களை மோப்பம் பிடித்த இந்திய அரசு அவர்களை தனிமைபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் அதிரைக்கு வந்த சுகாதார அதிகாரிகள் அவர்களை இனம்கண்டு அறிவுரை கூறியுள்ளனர்.

அதாவது தாங்கள் வீட்டை விட்டு வெளியில் சகஜமாக நடமாட கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனை ஒருகாதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ஊரில் பலர் சகஜமாக உலா வருவதாக சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற நிலையே தான் மற்ற நாடுகளிலிருந்தும் வந்தவர்கள். அரசின் உத்தரவை ஏற்க மறுப்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

நமக்கு நோய்த்தொற்று இருக்கிறதோ இல்லையோ சுகாதார அதிகாரிகள் விதித்துள்ள அந்த கெடு முடியும் வரை நிபந்தனை வாழ்வு வாழ்வதே சிறந்ததாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img