Sunday, February 1, 2026

27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.

ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.

தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது.

இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஷியா மதகுரு உள்ளிட்ட ஈராக் உயர் தலைவர்கள் சிலர் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டது நல்ல சூழலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இரு நாட்டு உறவு துளிர்விடத் தொடங்கியதை பிரதிபலிக்கும் வகையில் சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.

27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாக்தாத் செல்லும் முதல் விமானம் புறப்பட்டதும் இந்த தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பிளைனாஸ்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img