Saturday, September 13, 2025

உயிர் காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல.

மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

நமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் தோணியிலான வேண்டுகோளுக்கு உடனடியாக பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல.

நம் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கேற்ப, இது போன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

மத்திய அரசு நம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img