Wednesday, March 18, 2026

அதிரைக்கு வந்த அரசு பேருந்து ! பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி !!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா நோயால் போடப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து வைத்து இருந்தன.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு 50℅ பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த முதல் அரசு PP பேருந்தை அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், நகர அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளிவிட்டு வரவேற்றார்.

பின்னர் பேரூராட்சி ஊழியர்களால் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயணிகளை அனுமதித்தனர்.

பேருந்து இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்று, கூட்டமாக பேருந்தில் ஏற அனுமதியில்லை என நடத்துனரால் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கண்டிப்பாக வாய் மூக்கு கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வாய் மூக்கு கவசம் இன்றி பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஏறும்போதும் இறங்கும் போதும் பேருந்துகளில் வைக்கப்பட்ட சானிடைசர்களை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முதல் நாள் என்பதால் போதிய பயணிகள் இன்றி காணப்பட்டது.

அதிரைக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img