Saturday, September 13, 2025

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து – ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

தமிழக வக்பு வாரியத்தில் 2 எம்பிக்கள், 2 எம்எல்ஏ-க்கள், 2 பார் கவுன்சில் உறுப்பினர்கள், 2 முத்தவல்லிகள் என மொத்தம் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும், 4 பேர் அரசின் நியமன உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த 2019 செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக்கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அதில், ”பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும்பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிராதம் என அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img