Saturday, September 13, 2025

கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக கல்யாணராமனை கண்டித்து இஸ்லாமியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறைத்தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மௌலானா ஹாரூன், மருது மக்கள் இயக்க நிறுவனர் செ. முத்துப்பாண்டி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் அய்யாவழி பாலமுருகன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

முன்னதாக அந்தந்த தெருக்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என முஸ்லீம்கள் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். மேலும் ஆர்ப்பாட்ட களத்தில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நபர்களை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் பிரமுகர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img