Saturday, September 13, 2025

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி ?

spot_imgspot_imgspot_imgspot_img

முதல் முறையாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளீர்களா, உங்களின், வாக்காளர் அடையாள அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்று தெரியாமல் உள்ளீர்களா? கவலை வேண்டாம். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பார்ப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதியை உருவாக்கி உள்ளது. பொதுவாக நீங்கள் இசேவை மையத்திற்கு சென்றால் உங்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் புதியவர்கள் என்றால் நீங்கள் நேரடியாக வரும் வரை காத்திருக்க வேண்டும். இதுதான் கடந்த மாதம் வரை தமிழகத்தில் இருந்த நிலவரம் ஆகும்.

ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக இந்த வசதி, தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தவர்கள், அப்போது தாங்கள் வழங்கிய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்ததும், உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான குறுந்தகவல் உங்கள் மொபைலுக்கு வரும்.

அதில் இபிஐசி எனப்படும் வாக்காளர் அடையாள எண் இருக்கும். அதை வைத்துத்தான் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய http://www.nvsp.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். உங்களது செல்லிடப்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு, புதிய பயனாளர் முகவரியை உருவாக்குங்கள்.

அதை வைத்து உள் நுழைந்து, உங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது அது தொடர்பான குறுந்தகவலில் வந்த எண்ணைப் பதிவு செய்யுங்கள். உங்களது மாநிலத்தையும் பதிவு செய்து, வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img