Wednesday, March 18, 2026

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இரு கட்சிகளிடையே கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது.

பிறகு, போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில்,

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி – முஹம்மது அபூபக்கர்

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி – முஹம்மது நயீம்

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி – அப்துல் ரஹ்மான் ரப்பானி

ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த கட்சியின் வேட்பாளர்கள் ‘ஏணி’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img