Wednesday, March 18, 2026

திமுக கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் ஆதரவு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியிலுள்ள அமைப்பு தலைமையகத்தில் நேற்று, 14/03/2021 நடைபெற்றது.

அமைப்பு தலைவர் P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொன்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

வேளாண் சட்ட திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், GST, பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையுர்வு, நீட் தேர்வு , விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து வருகிறது அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு. அத்தோடு, மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவுபடுத்தி
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்தை , இந்திய இறையாண்மையையும் பாதுகாக்க போராடி வரும் விடுதலை
சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆதரவு அளிக்கிறது என முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img