Saturday, September 13, 2025

‘ஒரு சிலிண்டர் விலை 5,000 ரூபாய்’ – அமைச்சர் பேச்சால் அதிர்ந்த திண்டுக்கல் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன.

அவ்வப்போது சர்ச்சையாக பேசி சிக்கிக்கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வழக்கம். இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘ஒரு சிலிண்டர் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிமுக அரசு உங்களுக்கு இலவசமாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளது’ எனக் கூறியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ”ஒரு சிலிண்டர் எவ்வளவு விலை என்பது உங்களுக்குத் தெரியும்.

4,800 ரூபாய், ஏறத்தாழ ஐயாயிரம் ரூபாய். 6 சிலிண்டர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அருமையான திட்டத்தைப் பொது மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P...

தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில்...

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும்...
spot_imgspot_imgspot_imgspot_img