Sunday, February 1, 2026

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமானத்வரி துறை அறிவித்துள்ளது.

இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாத பலரும் இன்று முயன்றனர். இதன் காரணமாக அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பலரும் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. அதன்படி இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அதற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செயலற்றதாக ஆகிவிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img