Saturday, September 13, 2025

234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சில தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்படலாம் என்ற தகவலையும் தலைமை தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P...

தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில்...

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும்...
spot_imgspot_imgspot_imgspot_img