Sunday, February 1, 2026

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா!

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி என முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த ராகுல், இறுதியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லவிருந்தார்.

இந்நிலையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக தனது மேற்கு வங்க பிரச்சார பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மேற்கு வங்க மாநில பிரச்சார பயணத்தை ராகுல் ரத்து செய்ததற்கு அவருக்கு ஏற்பட்ட உடல்வலியும், சோர்வும் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இப்போது அதனை உறுதி செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ராகுலுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும், ராகுல்காந்தியின் அன்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img