Wednesday, March 18, 2026

அதிரையில் 110KV துணை மின் நிலையத்தை விரைந்து அமைத்திடுக – அமைச்சரிடம் அதிரை நூவன்னா கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.

குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவற்றையும், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட தனிநபர் கோரிக்கைகளையும் மக்கள் மனுக்களாக அளித்தனர்.

ஆயிரத்திற்கும் அதிகமாக மனுக்கள் இம்முகாம் வாயிலாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக, அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் நூவன்னா தனியே மனு ஒன்றை அளித்தார். அதில் அதிரை நகருக்கு அத்தியாவசிய தேவையான நகருக்கு 110கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாம் சார்ந்துள்ள 17வார்டு பகுதியில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித்திட்டம் இவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் நேரடியாக அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை உரிய இலாக்கா மூலமாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img