Friday, March 20, 2026

அதிரையில் திடீர் மின்தடை- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் இருந்து அதிரை நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிக மின் அழுத்தத்தால் பழுதாகும் இத்துணை மின் நிலையத்தை 110கிலோ வாட் கொண்ட மின் நிலையமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தின் கடைசியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இத்தடையை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் இடையூறு இன்றி பணிகளை முன்கூட்டியே செய்து கொள்கின்றனர்.

ஆனால் திடீரென இன்று காலை 11 மணியளவில் இருந்து 3:30 மணிவரை மின் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அறிவிக்கப்படாத மின் வெட்டிற்காண காரணத்தை அறிய மின்வாரிய தொலைபேசி எண்ணான 04363242444 என்ற எண்னை தொடர்பு கொண்டால் பதில் இல்லை என புலம்பி தள்ளுகிறார்கள் நுகர்வோர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img