Monday, December 1, 2025

அமீரக TIYA அமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அதன் தீர்மானங்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 08.12.2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் வழமைபோல் துபையில் சகோதரர் N. சேக்காதி அவர்களின் இல்லத்தில் அமீரக தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையிலும் கூடிய பொதுக்குழு சிறப்புற நடைபெற்றது,


 

அடாத மழையுடனும் விடாத காற்றுடனும் போட்டியிட்டு நடைபெற்ற இந்தப் பொதுக்குழு பொருளாளர் S. மீரா முகைதீன் அவர்களின் கிராஅத்துடன் துவங்க, இணைச் செயலாளர் சகோதரர் B. அபுல் பரகத் முஹல்லாவாசிகள் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், கடந்த சுமார் 6 மாதங்களாக தாயக TIYAவின் புதிய நிர்வாகிகள் ஆற்றியுள்ள சேவைகள், இனி தொடரவுள்ள சேவைகள் என அனைத்தும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதுடன் இப்பெரும் சேவைகளை துடிப்புடன் செய்து வரும் தாயகத்தின் புதிய TIYA நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாஞ்சையுடன் நினைவு கூறப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமீரக TIYAவின் பொருளாளர் சகோதரர் S. மீரா அவர்கள் வரவு செலவு விபரங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் முன் சமர்ப்பித்து விளக்கினார். இறுதியாக, கீழ்க்காணும் தீர்மானங்கள் விவாதத்திற்குப் பின் ஏகமனதாக நிறைவேற்றப்பட, கஃபாரா துஆவுடன் பொதுக்குழு நிறைவடைந்தது.
 தீர்மானங்கள்:

 1.அதிரையின் அனைத்து பகுதிகளிலும் பகல், இரவு நேரங்களில் தொடர் திருட்டுக்கள், கொள்ளை, வழிப்பறி, குழந்தை கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் பெருகியுள்ளதாக கிடைத்து வரும் தகவலை அடுத்து நமது மஹல்லா பொதுமக்களின் நன்மைக்காக முதற்கட்டமான நைட் விஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 3 சி.சி.டிவி காமிராக்களை நிறுவதென முடிவு செய்யப்பட்டது.
2. நமது மஹல்லாவைச் சேர்ந்த வசதிகளற்ற 2 குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கு மேற்கூறை அமைத்துத் தருமாறு விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து உண்மைநிலை கண்டறியப்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு தாயக TIYA நிர்வாகிகள் மூலம் தலா 10,000 ரூபாய் செலவில் தென்னங்கீற்றில் மேற்கூரை அமைத்துத் தர ஒப்புதல் தரப்பட்டது.
3. தாயக TIYA அலுவலக கட்டிடத்தை சீரமைத்தும் நமது முஹல்லா இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையான உடற்பயிற்சி மையம் மற்றும் நூலகம் ஒன்றை அங்கேயே ஏற்படுத்துவதற்கான பணிகளை இந்த வாரமே துவங்குவது எனவும், இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் நமது மஹல்லா சகோதரர்களை உதவி கேட்டு அணுகுவது எனவும் இதற்காக எழுவர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
4. பெண்கள் குளம் சம்பந்தமாக நமது முஹல்லாவின் தாஜூல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை அமீரக TIYA பரிசீலித்த வகையில், இத்திட்டத்திற்காக பெருந்தொகை தேவைப்படுவதாலும், நீண்டகால திட்டமாக இருப்பதாலும் தற்போதைக்கு இக்கோரிக்கை ஒத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
5.புதுக்குளத்தில் கலக்கும் சாக்கடை கழிவுநீரை தடுத்து மாற்றுவழியில் கொண்டு செல்ல நமது மஹல்லா ஜமாஅத்துடன் இணைந்து தாயக TIYA நிர்வாகிகளும் நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.V. சேகர் அவர்களை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இப்பணியை செய்து தருமாறு கோரிக்கை மனு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img