Sunday, February 1, 2026

JUST IN – ராஜிவ் கொலை வழக்கு: நளினி உள்ளிடட 6பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

spot_imgspot_imgspot_imgspot_img

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.

அதைத் தொடர்ந்து நளினி உட்பட சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நளினி உட்பட மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய இன்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, “சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img