எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மார்க்கமாக எர்ணாகுளம் வரை சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமீப நாட்களாக அவ்வழியாக செல்லும் போது சில ரயில்களை குறிவைத்து சமூக விரோதிகள் கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அதிராம்பட்டினத்தை கடந்து செல்லும்போது சமூக விரோதிகள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் 20 வயதுடைய கேரள பயணி ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து நிலைய அதிகாரி இடம் புகார் அளித்ததின் பேரில் இருப்புப்பாதை காலவர்கள் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக தமிழகத்தில் ரயில்மீது தொடர் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது என்றும், அது அதிராம்பட்டினம் அருகே நடைப்பெறுவது என்பது கவலையளிப்பதாக அதிராம்பட்டினம் ரயில்பயணிகள் சங்க நிர்வாகி ஹாஜி MS ஷிகாபுதீன் அவர்கள் தெரிவித்தார்,
இக்குற்ற செயல்களை ஒடுக்க அதிராம்பட்டினம் ரயில் இருப்பு பாதை எல்லைக்குள் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இக்கல்வீச்சில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு அதிராம்பட்டினம் ரயில்பயணிகள் சங்கம் சார்பில் ஆறுதலை கூறி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.