Sunday, February 1, 2026

அதிரையில் திறமையற்ற நிர்வாகத்தால் நெடுஞ்சாலையே, குப்பை கிடங்காக மாறும் அவலம் – ஆட்சியருக்கு அதிரை IUML கடிதம் !

spot_imgspot_imgspot_imgspot_img

நெடுஞ்சாலையை குப்பைகிடங்காக மாற்றிய நகராட்சி – ஆட்சியருக்கு அதிரை முஸ்லிம் லீக் நகர செயலாளர் கடிதம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் டன் கணக்கில் குப்பை சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

மக்களின் வரிப்பணம் 1.5கோடி மதிப்பிலான மறு சுழற்சி மையமும் செயல்படாமல் தினந்தோறும் அள்ளப்படும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் நகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது இது திறமையற்ற நிர்வாகத்தையே காட்டுகிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை நகர செயலாளர் Z முகம்மது தம்பி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதில் அதிராம்பட்டினம் குப்பை கிடங்கில் மலை போல குப்பை நிரம்பி இருக்கிறது குப்பைகளை கொட்ட வழியின்றி நகராட்சி ஊழியர்கள் சாலைகளின் இரு மருகிலும் குப்பையை கொட்டி வருகிறார்கள் இதனால் ஆடுமாடு நாய்கள் அக்குப்பைகளை கிளறி வருகிறது இதனால் சாலைகளில் இறைந்து வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பாதசாரிகளை நாய்கள் துரத்திகாயப்படுத்தி வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img