Sunday, February 1, 2026

அதிரை SSMG தொடர் : வெளுத்து வாங்கிய WFC – வெளியேறியது இளையான்குடி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற ஆறாம் நாள் ஆட்டத்தில் இளையான்குடி அணியினரும் வெஸ்டர்ன் FC அதிரை அணியினரும் மோதினர்.

ஆட்டம் ஆரம்பித்த சில நொடிகளிளேயே 3 வாய்ப்புகளை நழுவ விட்டது இளையான்குடி. லாவகமாக வந்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்த இளையாங்குடிக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தது WFC. இந்த நிலையில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்த WSC அணியினர் அதே உத்வேகத்தோடு மீண்டும் ஒரு கோல் அடிக்க முனைப்பு காட்டிய நிலையில் ப்பீப்பீ ஊதி ஆட்டத்தை முடித்து வைத்தார் நடுவர்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய WFC வீரர் சாதஸ் கானுக்கு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு பரிசாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நாளைய தினம்(18/06/2023) விளையாட வேண்டிய அணிகள் :

டான் போஸ்கோ மதுரை vs கலாகோ தஞ்சாவூர்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img