Wednesday, March 18, 2026

முடிந்துபோன கல்யாணத்திற்கு மேளம் கொட்டிய அதிரை நகராட்சி!! ரூ.29.5லட்சம் வீண்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியின் தற்போதைய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் மட்டுமே ஆன இந்த சிமெண்ட் கான்கிரீட் அலுவலகத்தில் தற்போது இடம்பற்றாக்குறை இருப்பதால் வேறொரு இடத்தில் தமிழ்நாடு அரசின் ரூ.3.5கோடி பங்களிப்புடன் நகராட்சியின் ரூ.1.5கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.5கோடி மதிப்பீட்டில் புதிதாக நகராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கைவிடப்பட இருக்கும் அதிரை நகராட்சியின் பழைய அலுவலகத்திற்கு உட்கட்டமைப்பை காரணம் காட்டி ரூ. 29.5லட்சம் செலவு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் புதிய மன்ற கூடம், குளுகுளு ஏ.சி, நகராட்சி தலைவருக்கு பிரத்யேக கழிவறை உள்ளிட்ட நிரந்த கட்டமைப்பிற்கான செலவீனங்களும் அடங்கும். அதிரை நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சூழலில் கைவிடப்பட இருக்கும் நகராட்சி கட்டிடத்திற்கு ரூ.29.5லட்சத்தை அவசர அவசரமாக செலவு செய்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img