Saturday, September 13, 2025

வரதட்சணை ஒழிப்பு தொடர் பிரச்சாரம்- TNTJ தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு மாவட்டத்தலைவர் K. ராஜிக் முகமது தலைமையில் அதிராம்பட்டினம் கிளை-1 பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது “பொருளியல்” என்ற தலைப்பிலும், மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் “நிர்வாகவியல்” என்ற தலைப்பிலும் மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது “கடந்து வந்த பாதை” என்ற தலைப்பிலும் ,மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் மாவட்டத்தின் அடுத்த செயல் திட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.

மேலும் மாநிலச் செயலாளர் தரமணி யாசிர் “ஈமானை காக்கும் கேடையம் தாஃவா பணி” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியை மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் தொகுத்து வழங்கினார்.

இக்கூட்டத்தில் அக்டோபர்-21 முதல் டிசம்பர் -31 வரை வரதட்சணை ஒழிப்பு & ஆடம்பர அனாச்சார திருமணத்திற்கு எதிராக தொடர் பிரச்சாரம் கிளைகள் தோறும் முன்னெடுக்கப்படும் என தீர்மானித்து செயல் திட்டங்கள் வரையறுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ECR பகுதி நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்டத் துணைச் செயலாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img