Saturday, September 13, 2025

பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மதுக்கூரில் நாளை எஸ்டிபிஐ நடத்தும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினம், பாசிச எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினத்தின் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் M. முஹம்மது ரஹீஸ் தலைமை வகிக்கிறார். விமன் இந்தியா மூமண்ட்(WIM) அமைப்பின் மாநிலச் செயலாளர் தஸ்லீமா ஷெரீப் கண்டன உரையாற்றுகிறார். இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img