Sunday, May 5, 2024

அதிரையில் ஐமுமுக நடத்திய பாசிச எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதிராம்பட்டினத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6, பாசிச எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐமுமுக தலைமை கழக பேச்சாளர்கள் திருச்சி ஜாகிர் மற்றும் அதிரை ஷேக் உமர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது பேசிய அதிரை ஷேக் உமர், சட்டத்தை மதிக்கும் எங்களால் தான் இது மாதிரியான ஜனநாயக வழியில் நின்று போராட முடியும் என்றார். பின்னர் பேசிய திருச்சி ஜாகிர், பாபர் மசூதி இடிப்பிற்கான நோக்கங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. குறிப்பாக பாபர் மசூதி இடிப்பதற்கு டிசம்பர் 6ஐ ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை விளக்கி பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை, பட்டுக்கோட்டை நகர ஐமுமுக நிர்வாகிகள், ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...