Wednesday, March 18, 2026

நெல்லை, காயல்பட்டினத்து மக்களுக்கு உதவிடுங்கள் – முஸ்லீம் லீக் நகர செயலாளர் வேண்டுகோள்.

spot_imgspot_imgspot_imgspot_img

காயல்பட்டினத்தில் கொட்டி தீர்க்கும் கன மழையினால் அங்கிருக்கும் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 960 மி.மீ மழை பெய்துள்ளது இது ஓராண்டு பெய்யும் மழையின் அளவை விட அதிகமாகும், இந்த காட்டு மழையினால் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மின்தடை ஏற்பட்டு உள்ளதால் தொலைதொடர்பு சாதனங்களும் செயலிழந்து இருக்கிறது.

அங்குள்ள மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டமான சூழல் உருவாகி உள்ளது, இவர்களுக்கு முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் உதவி வருகிறார்கள்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக் செயலாளர் முகம்மது தம்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து அனுப்ப.மாநில தலைமை அறிவித்தலை தொடர்ந்து அதிராம்பட்டினம் நகர கிளை தயாராகி வருகிறது.

அதன்படி பின்வரும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி நகர நிர்வாகிகள் வசம் ஒப்படைத்தால் தலைமையின் சிறப்பு குழு மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு.சேர்க்க உள்ளார்கள் ஆதலால் இத்தருணத்தில் உங்களின் அதிகப்படியான உதவிகளை செய்திட வேண்டும்.என முஸ்லீம் லீக்கின் நகர செயலாளர் முகம்மது தம்பி தெரிவித்யிருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img