Tuesday, September 30, 2025

இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் – மீண்டும் போராட ஆயத்தமாகும் போராட்ட குழு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பில் நடைபெற்று வரும் இமாம் ஷாஃபி பள்ளி குத்தகை ஒப்பந்த அடிப்படையில் மக்தூம் பள்ளியருகே செயல்பட்டு வந்தன, ஒப்பந்தத்தின் படி வாடகையை நிலுவையின்றி செலுத்தியும் உள்ளனர்.

இந்த நிலையில் நகராட்சியாக தரமுயற்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நிர்வாகம் வாடகையை பெற்றுக்கொள்ள மறுத்து வந்துள்ளது.

இதனிடையே இராம குணசேகரனால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பும் கிடைத்திருக்கிறது, அதில் வாடகையை செலுத்த தவறிய காரணத்தால் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த சட்ட விதியையும் பின்பற்றாத நகராட்சி நிர்வாகம் திடீரென ஜெசிபி கொண்டு பள்ளியை இடிக்க முயற்ச்சி மேற்கொண்டது.

இது பெரும் பரபரப்பை உருவாக்கி பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு வழிவகுத்தன.

11 நாட்கள் நடைபெற்ற தொடர் போராட்டம் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து பேச்சுவர்த்தைக்கு முன் வந்தனர் அப்போது போராட்ட குழுவினர் பூட்டை திறந்தால்தான் பேச்சு வார்த்தை என திட்டவட்டமாக கூற வேறு வழியின்றி நிபந்தனை அடிப்படையில் சீல் வைக்கப்பட்ட பூட்டு நகராட்சி ஊழியர்களால் திறக்கப்பட்டது.

ஆனால் உடன்படிக்கையின் படி அதிகாரிகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. காலம் தாழ்த்தும் அதிகாரிகளால் சந்தேகம் கொண்ட போராட்ட குழுவினர் வருகிற 9ஆம் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தை கட்டமைக்க முயற்ச்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இப்போராட்டம் தமிழகம் தழுவிய கவனத்தை ஈர்க்கும் எனவும் போராட்ட குழுவினர் கூறி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img