Sunday, February 1, 2026

தஞ்சை தொகுதியை கேட்கும் S.H.அஸ்லம்!

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டில் விரைவில் நடக்க இருக்கும் 18வது மக்களவை பொதுத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை கூட்டணி கட்சிகளை உறுதி செய்வதில் திமுகவும், அதிமுகவும் மும்முரமாக உள்ளன.

இந்த சூழலில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருலாளரும் அதிராம்பட்டினம் முன்னாள் பேரூர்மன்ற தலைவருமான எஸ்.எச்.அஸ்லம் விருப்பம் தெரிவித்துள்ளார். எளிய மனிதராக திகழும் இவருக்கு கட்சியினர், மக்களிடையே நல்ல பெயர் உள்ளது.

அதுமட்டுமின்றி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரின் நன்மதிப்பையும் அஸ்லம் பெற்று தலைமையின் குட் புக்கில் இருப்பதாலும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிதுவத்தை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தும் வகையில் அஸ்லத்திற்கு திமுக தலைமை சீட் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவருக்கான நேரடி தேர்தலில் போட்டியிட்டு அஸ்லம் வெற்றிபெற்றார். இதன் மூலம் முதன்முறையாக திமுகவை சேர்ந்த ஒருவர் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக பொறுப்பேற்றார் என்கிற வரலாற்றை இவர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img