Saturday, September 13, 2025

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா??

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர் சாலை விபத்துகள் ஏற்படுவதும் இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும் பொதுமக்கள் பலரும் அறிந்ததே.

இதில் குறிப்பாக சமீபத்தில் அதிராம்பட்டினம் ECR சாலைகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளும் அதனால் ஏற்பட்ட மரணங்களும் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இதனை கருத்தில் கொண்டும் ஊர் நலன் கருதியும் இனி வரக்கூடிய காலங்களில் சாலை விபத்துகளை தடுப்பதற்கும் அதிரை எக்ஸ்பிரஸ் கள ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக அதிரை நகராட்சி அலுவலகம் அருகே வார சந்தை ECR சாலையில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் இந்த பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு பொதுமக்கள் பலரும் அந்த இடத்தில் உள்ள வார சந்தையை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக்கோரி கோரிக்கை வைத்தும் இன்றளவில் எந்த வித நடவடிக்கையும் நெடுசாலை துறை மேற்கொள்ளவில்லை.

மேலும் பொதுமக்கள் சாலை ஓரம் நடந்து செல்வதற்கு இடையுராக அதிரை பேருந்து நிலையம் முதல் மல்லிப்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை சாலையில் பல்வேறு வியாபார ஸ்தலங்கள் வைத்திருப்பவர்கள் தன்னுடைய வியாபார தேவைக்காக அந்த ECR சாலையோர நடைமேடைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி சாலை விபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நெடுசாலை துறை எந்த நடவடிக்கையும் இன்றளவும் மேற்கொள்ளவில்லை.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகைகள் நெடுசாலை துறை அதே ECR சாலையில் நடைமேடைகளின் மேற்கூரைகள் இல்லாததையும், சாலையோர நடைமேடைகளில்
வளர்ந்துள்ள புதருகளை அகற்றுவதற்கு பல மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் நெடுசாலை துறை நடைமேடை மூலம் பொதுமக்களுக்கு பாடைகட்ட முயற்சிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்பொழுது வரை பொதுமக்கள் நலனில் மெத்தனபோக்கில் செயல்படும் நெடுசாலை துறை இந்த கள ஆய்விற்கு என்ன நடவடிக்கை எடுகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாலையோர நடைமேடையில் வியாபார ஸ்தலங்களின் பதாகைகள் உள்ளதால் சாலையில் பாதுகாப்பின்றி நடந்துவரும் பொதுமக்கள்
சாலையோரத்தில் புதர் மண்டியுள்ள காட்சி
சாலையோர நடைமேடையில் வியாபார ஸ்தலங்கள்
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img