Sunday, February 1, 2026

அதிரை 12வது வார்டு பகுதியில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்..!! கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு 12வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிரையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்பொழுது வாய்க்கால் தெரு பகுதிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கழிவு நீர் கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டு வடிகால் சரியான முறையில் அமையப்பெற்றதா என்று சோதனை செய்தனர். அந்த சோதனை ஓட்டத்தில் நீர் சரியான முறையில் அந்த கால்வாயில் ஓடியதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கால்வாயின் மூலம் அப்பகுதியில் மழை நீர் வடிந்து ஓடுவதற்கான ஆதாயம் உள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி இந்த பணிகளை துரிதமாக முடிவடைய மேற்பார்வையிட்டு வரும் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுதீனை பாராட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img