Tuesday, September 30, 2025

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான பெண்மணி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக IMMK நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அந்த வயதான பெண்மணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக IMMK நிர்வாகிகள் அனுமதித்துள்ளனர். அந்த வயதான பெண்மணியை தர்காவில் இருந்து மீட்கும்பொழுது பணப்பையும் அந்த பையில் கொஞ்சம் பணமும் இருந்துள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த வயதான பெண்மணி உடல்நிலை சாதாரண நிலைக்கு வந்த உடன் அவர்களின் அந்த பணப்பையை ஒப்படைக்கலாம் என எண்ணி ஐமுமுக நிர்வாகிகள் அந்த பணப்பையை பாதுகாத்து வந்துள்ளனர். அந்த பெண்மணியோ எந்த தகவலும் இன்றி மருத்துவமனையில் இருந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த பணப்பை ஐமுமுக நிர்வாகிகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் வயதான பெண்மணி ஒருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்த விட்டதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவியது. இறந்த பெண்மணிக்கு பதிலாக சமீபத்தில் ஐமுமுக நிர்வாகிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி புகைப்படம் பரவியத்தை அறிந்த நிர்வாகிகள் அந்த பெண்மணி குறித்து ஆராய துவங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தில் உள்ள பெண்மணி உயிரோடு நலமாக உள்ளதாக மல்லிப்பட்டினம் பகுதியில் இப்ராஹிம் என்ற நபரிடம் இருந்து வந்த தகவலை தஞ்சை மாவட்ட CBD அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர் அலி உறுதி செய்தார். அதன் பின்னர் இந்த தகவலை ஐமுமுக நிர்வாகி அதிரை கனி அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் அந்த வயதான பெண்மணியின் சத்திரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு ஐமுமுக நிர்வாகிகள் நேரில் சென்றி அந்த பணப்பையை ஒப்படைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img