Sunday, February 1, 2026

அதிரையில் தொடர் மழை! வீடுகளில் முடங்கிய மக்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஈச்சன்விடுதி, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் அதிராம்பட்டினத்தில் மழை பெய்த நிலையில், நேற்று முற்பகல் முதல் மழை குறைந்து இயல்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணிமுதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் லேசாக பெய்த மழை, இன்று காலை முதல் மிதமான மழையாக தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்து வந்தாலும், அதிரையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இத்தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா(வேதாரண்யம்) தொடங்கி நெல்லை(மாஞ்சோலை) பெல்ட் வரை கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை(20/11/24) காலை 11.30 மணி நிலவரப்படி அதிரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் :

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img