வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் அதிரையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக அதிகாலை முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அதிராம்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதிரையில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கீழ்கண்ட பேரிடர் மீட்புக்குழுவை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.







