Saturday, September 13, 2025

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல் மிககனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடஇலங்கை மற்றும் தமிழகத்தின் டெல்டா கடற்கரையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், இன்றும் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களான சென்னை முதல் தஞ்சாவூர் வரை உள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு, விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினத்தில் நேற்று காலை தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில்(நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை) பதிவாகிய மழை அளவு(மி.மீ-ல்) :

அதிராம்பட்டினம் – 75.4 மிமீ
பூதலூர் – 69.8 மிமீ
லோயர் அணைக்கட்டு – 69.4 மிமீ
ஒரத்தநாடு – 69.2 மிமீ
பட்டுக்கோட்டை – 60 மிமீ
மதுக்கூர் – 55.4 மிமீ
மஞ்சளாறு – 52.4 மிமீ
வெட்டிக்காடு – 50.6 மிமீ
அய்யம்பேட்டை – 49 மிமீ
பாபநாசம் – 47 மிமீ
திருவிடைமருதூர் – 46 மிமீ
கும்பகோணம் – 46 மிமீ
நெய்வாசல் தென்பாதி – 45.4 மிமீ
பேராவூரணி – 40.2 மிமீ
தஞ்சாவூர் – 38.3 மிமீ
குருங்குளம் – 37.6 மிமீ
திருவையாறு – 37 மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 31 மிமீ
வல்லம் – 30 மிமீ
கல்லணை – 21.8 மிமீ
ஈச்சன்விடுதி – 14 மிமீ

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img