அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் கண்ணன் இவரது மகன் அரவிந்த் வயது 20 இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அரவிந்த போனில் அழைத்ததன் பேரில், ராஜமடம் சவுக்கு காட்டிற்கு சென்றுள்ளார்.
அரவிந்துடன்,அவரது நண்பர் சக்திவேலின் மகன் சரண் 20என்பவரும் சென்றிருக்கிறார், அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பார்க்கத சிறுமி சப்தமிட்டுள்ளார், சிறுமியின் அலறல் சப்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பியோடிய இருவர் குறித்தும் புகார் அளித்தனர் புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த அதிரை போலிசார் வழக்குப்பதிவு சிறையிலடைத்தனர்.