அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், “குளங்கள் மாசுபடுவதால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எதிர்கால சந்ததிக்கு நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். குப்பை கொட்டுவோரைத் தண்டிப்போம்” என்றார்.
உறவுகள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
குப்பை கொட்டி கொளுத்தும் நகராட்சி ஊழியர்களை இந்த மூன்றாம் கண் கண்காணிக்குமா?







