Monday, December 1, 2025

அமீரகத்தில் வாழ்பவரா நீங்கள் கண்டிப்பாக படிக்கவும்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அமீரகத்தில் நாளை முதல் (ஆகஸ்டு_1 2018) பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது.இதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரிவான சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும்.

இதன் முடில்படியாக தாயகம் திரும்ப தேவையான பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்யும் நபர்கள் அதன் வேலைகள் முடிந்து 21 நாட்களுக்குள் அங்கிருந்து தங்கள் தாய்நாடு திரும்ப வேண்டும்.

இவர்கள் திரும்ப அமீரகத்தில் வேலைக்கு செல்ல எந்த தடையும் இருக்காது என்று துபாய் தொழிலாளர் துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய பத்திரிகைகள் சந்தைப்படுத்தல் தெரிவித்தார்.

1) அமீரகத்தில் முறைப்படியான விசா மூலம் வேலைக்கு வந்து,பின்னர் சட்டத்திற்கு புறம்பாக தங்கிவரும் தொழிலாளர்கள் பிழை செலுத்தாமல் தாயகம் திரும்பலாம்.

2) அல்லது புதிய (Sponsor)முதலாளியின் கீழ் விசா மாற்றமும் செய்யலாம்.

3) சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் அதன் நடவடிக்கைகள் முடிந்த பிறகு பொதுமன்னிப்பு பெற விண்ணப்பிக்க முடியும்.

4) சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் நுழைய நபர்களும் தாயகம் திரும்ப முடியும் ஆனால் இரண்டு வருடங்களுக்கு திரும்ப வர முடியாது.

5) விண்ணப்பம் செய்யும் நபர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பத்திரிகைகள் சந்திப்பில் தெரிவித்தார்.

6) Exit ஆவணங்கள் கிடைக்கும் நபர்கள் உடனடியாக தாயகம் திரும்பும் வேலைகளை செய்ய வேண்டும்;இதற்கு 221 (Dirham) திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும்.

துபாய் தவிர மற்ற அமீரகத்தின் கிளை நாடுகளில் உள்ள நபர்களுக்கு பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்ய #ஆல்_ஆபீர் பகுதியில் விரிவான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு வருவதற்கு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் RTA வாகனங்களின் சேவைகள் கிடைக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

Passport மற்றும் எந்த ஆவணங்களும் இல்லாத நபர்களுக்கு இந்த மையத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.

இந்த மையத்தில் அமீரகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் இந்த மையத்தில் சேவைகளை வழங்க தயார் நிலையில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் Passport தங்கள் கைகளில் இல்லாமல் முதலாளியின் கையில் சிக்கியுள்ள நபர்கள் இது தொடர்பாக அந்தந்த நாட்டின் தூதரகங்களின் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று அவர்கள் அதற்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் Passport மற்றும் அமீரகத்தின் அடையாள அட்டை உள்ள நபர்கள் ஆமர் மையங்கள் வழியாகவும் பொதுமன்னிப்பு விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியும்.

முதலாளி(Sponsor) மற்றும் கம்பெனி உரிமையாளர் பதிவு செய்துள்ள திருத்தமாக வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களுக்கு இந்த பொதுமன்னிப்பை பயன் படுத்தலாம்.

1) இதற்கு முதலாளி(Sponsor) தனிப்பட்ட முறையில் பதிவு செய்துள்ள வீட்டை விட்டு வெளியே வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் இதற்கு தீர்வு காண 121 (Dirham) திர்ஹமும்

2) தனியார் கம்பெனி உரிமையாளர்கள் பதிவு செய்துள்ள வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் 521 (Dirham) திர்ஹமும்
கட்டணமும்

3) அரசுத் துறைகளில் Man missing வழக்குகள் உள்ள நபர்கள் 71 (Dirham) திர்ஹமும் கட்டணமும்

4) முதலாளியின் உதவியின்றி வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் தீர்வு காண ஆமர் மையங்கள் வழியாகவும விண்ணப்பம் செய்ய முடியும் இதற்கு 521 (Dirham) திர்ஹமும் கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும் புதிய வேலைக்கு மாறவும் முடியும்.

6) 6 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்திலுள்ள Visa பெறவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு கடந்த மாதமே இதற்கான முதல் அறிவிப்பு வந்த முதலே பொதுமன்னிப்பு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமீரகத்தில் இயங்கி வருகிற இந்த அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இந்திய தூதரகங்க அதிகாரி பல்வேறு நடவடிக்கைகள் விழிப்புணர்வு அறிவிப்புகளை மக்களிடையே அறிவிப்பு செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் உதவினால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பயன் அடைந்து தாய்நாடு திரும்ப முடியும் என்பதில் ஐயமில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கி பொதுமன்னிப்பை 62,000 பேர் வரையில் பயன் படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் அரசின் (HelpCenter Numbers)
உதவிக்கு எண்கள்:

1. Abu Dhabi: 023875667

2. Dubai: 043875777

(8:00 am to 8:00pm )

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img