Tuesday, December 2, 2025

மத்திய அரசை கண்டித்து நாடு முழுதும் நாளை பந்த் !!

spot_imgspot_imgspot_imgspot_img

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தருகிறது. பாமக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் நாளை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img