Thursday, March 19, 2026

மக்களே ! இனி வங்கி சேவைக்கு ஆதார் அவசியமில்லை..!

spot_imgspot_imgspot_imgspot_img

அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இதில் 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பளித்துள்ளனர். மூன்று பேரும் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். இந்த தீர்ப்பின்படி அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமாகிறது.

ஆனால் வங்கி சேவைகளுக்கு தற்போது ஆதார் எண் அவசியம் இல்லை. வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைத் தரத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.

அது போல் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. இதன் காரணமாக இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img