Sunday, February 1, 2026

அதிரையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையிலும், அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்த பாடில்லை. அதிரையை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிரைக்கு நீர் திறந்து விடக்கோரி, மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு நீர்வளத்துறை அதிகாரிகளை கடந்த 3 மாதமாக சந்தித்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரைக்கு தண்ணீர் திறந்துவிடாத அரசை கண்டித்து நாளை 14.11.2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை ஈசிஆர் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

எனவே இந்த சாலை மறியல் போராட்டத்தில் எவ்வித கட்சி பேதமும் இன்றி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதிரைக்கு நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் அதிரை கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்விஷயத்தில் நாம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்தால், கூடிய விரைவில் அதிரை குடிநீர் பஞ்சத்தில் சிக்குவது நிச்சயம். நீருக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொண்டு, அதிகார வர்க்கத்தின் கதவை பலமாக தட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் !

மறந்துவிட வேண்டாம் !

போராட்ட நாள் : நாளை 14.11.2018 புதன்கிழமை

இடம் : ஈசிஆர் சாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு

நேரம் : காலை 10 மணி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...
spot_imgspot_imgspot_imgspot_img