Sunday, February 1, 2026

அதிரையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் புரட்டி போட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் சரியான முறையில் நிவாரணம் பொதுமக்களுக்கு வரவில்லை என்று அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு அறிவித்த நிவாரணம் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல முறை நாங்கள் அதிகாரிகளிடம் கூறிவிட்டோம் பல முறை போராட்டத்தில் ஈடுப்பட்டோம் ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் இன்று வரை சரியாக நிவாரணம் பொதுமக்கக்கு வந்து சேரவில்லை என்று தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் தகுந்த அரசு அதிகாரிகள்  பொதுமக்களுக்கு நிவாரண வழங்க உறுதியாளிக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img